"... குவைத் ஹொஸ்பிடல் தொடர்பில் குவைட் ஹொஸ்பிடல் அல்லாவுக்குப் பதில் சொல்ல வேண்டும். அதற்கு மேலதிகமாக தனியார் கம்பனியாகப் பதிவு செய்தள்ளதால் கம்பனிச்சட்டங்களுக்கு இணங்க நடக்க வேண்டும். மேலும் சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்துள்ளமையால் அதற்குறிய ஆவணங்களை சமர்பித்தாக வேண்டும்.
இதற்கப்பால் குவைத் ஹொஸ்பிடல் ஒரு வக்ப்ஃ சொத்தன்று. அது வக்ஃப் சபையில் பதிவு செய்யப்படவுமில்லை. ஆக பொதுமக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் அதனை நிர்வகிக்கும் இலங்கை ஜமாதே இஸ்லாமிக்கு இல்லை."
பொதுமக்களின் தேவையை முதன்மைப் படுத்தி குவைத் ஸகாத் நிதியத்திலிருந்து மில்லியன் கணக்கில் ஸகாத் பணத்தைப் பெற்று கட்டிய குவைத் வைத்தியசாலையை இப்போது பொதுமக்களின் தேவைக்குப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும் அது குறித்த மக்களின் கேள்விகளுக்குப் பொறுப்பாகக் பதில் சொல்லாமல் இருப்பதற்கான நியாயமாக இலங்கை ஜமாதே இஸ்லாமி குறித்த நிறுவனம் தனியார் நிறுவனமாகக்ப பதிவு செய்யப்பட்டிருப்பதனைக் காரணமாக முன்வைக்கின்து.
ஒரு தனியார் நிறுவனமாகப் பதிவு செய்த ஒரே ஒரு காரணத்திற்காக ஸகாத் பணத்தில் புகுந்து விளையாடலாம் அது குறித்து மக்கள் கேள்வியெழுப்பக் கூடாது என்கின்ற இலங்கை ஜமாதே இஸ்லாமியின் வாதத்தை ஏற்றுக்கொண்டால் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் என்ற இஸ்லாத்தின் அடிப்படையான போதனையின் பொருளென்ன?
அன்று நாட்டின் தலைவராக இருந்த உமர் (ரலி) குத்பா ஓதிக்கொண்டிருந்த போது அங்கிருந்த ஒரு பொதுமகன் எழும்பி உமரே பைத்துள்மாலில் (ஸகாத் நிதியத்தில்) இருந்து கொடுக்கப்பட்ட துனியால் உம்மைப் போன்று ஒருவருக்கு முழு ஆடை தைக்கப் போதாது என்று இருக்கும் நிலையில் நீங்கள் மாத்திரம் எப்படி முழு ஆடை தைத்து உடுத்துகிறீர்? பைத்துல்மால் (ஸகாத் நிதியத்தின்) பணத்தில் நீர் அநீதமாக நடக்கிறீரா என்று கேட்டதற்கு உமரின் மகன் தனது பங்கைத் தனது அப்பாவுக்கு வழங்கியதாகக் குறிப்பிட்டதனைக் வாய் கிழிய குத்பாக்களில் குத்திக்குதருகின்றோம்.
புத்தளம் குவைத் வைத்தியசாலை விவகாரத்தில் அல்லாவுக்குப் பொறுப்புச் சொல்லல் என்பது இலங்கை ஜமாதே இஸ்லாமிக்கு மாத்திரம் கடமையான ஒரு விடயமன்று. அதனைப் பதிவு செய்யும் ஒழுங்கில் தவறு செய்திருந்ததால் அதனைத் திருத்துவது எவ்வாறு என்றுதான் இனி சிந்தித்தாக வேண்டும். அவ்வாறில்லாமல் பதிவு செய்யும் முறை ஒரு (அமானிதத்தை) பொதுப் பொறுப்பை தனியுடைமைiயாக மாற்றாது என்பதனை இலங்கை ஜமாதே இஸ்லாமியயும் அதன் புத்தளம் கிளையும் புத்தளம் வாழ் மக்களும் புரிந்து கொள்வது அவசியமாகும்.
Leave a comment