முடை நாற்றம் முகரவும், முகஞ் சுளிக்கவும் தெரியாத முஸ்லிம் அரசியல்...

(0 votes)
Photo: uktamilnews.com
06 August
2014
Written by:
Photo: uktamilnews.com

By: Newton Isaac

முடைநாற்றம் முகரவும், முகஞ் சுளிக்கவும் தெரியாத முஸ்லிம் அரசியல் அற்பங்கள் ! யாருக்கும் வெட்கம் இல்லை.

“வெளியே போ...போ” என்று சொல்லாமற் சொல்லும் போதெல்லாம் வெட்கங் கெட்டுப்போய் உள்ளே இருந்த ஹக்கீமும், “வெளியோ போ ..போ” என்று சொல்லியும் போகாமல் உள்ளே இருக்கும் வெட்கங் கெட்டவன் என்ற ஹக்கீமைச் சாடிய ரிசாதும் ஊவாவிலே கைகோர்க்கும்போது முஸ்லிம் சமுகம் வெட்கித் தலை குனிகிறதோ இல்‌லையோ பல்லினச் சமுகத்தின் முஸ்லிம் இனக் குழுமத்து அங்கம் என்பதால் நான் வெட்கித் தலை குனிகிறேன். “அடிப்படைவாதிகள்”, “சமூகத் துரோகிகள்” எனச் சாடிச் சாடி முகாந்தரமில்லாது வெறும் வாயைச் சப்பிக்கொண்டிருந்தவர்கள் சப்பிச் சப்பி அசை போட அவலை அள்ளித் தட்டுகிறார்கள் இந்த அரசியல் மூன்றாந் தரங்கள். 

அஷ்ரபின் ஆல விருட்சத்தின் கீழ் நின்று ”அல்லாஹ் ரசூல் வழி நடந்தே நாம் நல்லதோர் உலகம் செய்திடுவோம் வல்லவன் ஒருவன் வழிகாட்ட வைழ்ந்திடுவோம் நாம் வையகத்தில்”” என்று உச்ச குரலில் ஒலித்தவர்களை ஒரு காலத்தில் “போராளிகள்” என்று அழைத்தார் அஸ்ரப். அப்போது அஷ்ரபின் ஆல விருட்சத்தின் கீழ் குவிந்து கிடந்த அத்தனையும் வைரக் கற்கள் என்று எத்தனைபேர் நினைத்திருப்பார்கள். இப்போது அத்தையும் உப்புக் கற்கள் என்று காணும்போது அவர்களின் மனம் எப்படி வேதயைுறும்.

தாணைத் தளபதி மறைந்த பின்னர்தான் உப்புக்கற்களின் சுய வடிவம் தெரிந்தது. போராளிப் போர்வைகளில் சாத்தான்கள் கோர முகங் காட்டிச் எக்காளமிட்டுச் சிரித்ததை ”குமாரி” என்ற பெண் நாடகத்தில் இலங்கையின் இஸ்லாமியச் சமுகம் கண்டது.

இந்தக் ”குமாரி” என்ற நாடகத்தில் கிழக்கு முதல்வரும், வணிகத் துறை அமைச்சரும், ஒரு முன்னாள் வெளிநாட்டு ராஜ தந்திரியும் சேர்ந்து கும்மியடித்போது முடை நாற்றத்தைத் தாங்க முடியாது சமுகம் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவை தலையிட்டு விமோசனம் வேண்டி நின்றது. ஆத்மீகத் துறையில் தம்மால் ஆக வேண்டியவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த அகில இலங்கை உலமா அப்போது ஒரு உள்ளுராட்சி மன்றத்தின் சுத்தி சேவைத் பணிக் குழுவாய் மாறியது. பொது விசாரணை என்ற பெயரில்.

அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி அவர்களின் தலைமையில் ஒரு பிடிக்குள் அடங்கும் அதன் நிறைவேற்றுக் குழு அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் தலைமைப் பணி மனையில் பல இலவுகள் கூடி உச்ச நிதி மன்ற விசாரணைக்கொப்பான விசாரணை ஒன்றை முன்னெடுத்தது. முழுக்க முழுக்க ஒரு நீதி மன்றம் போல அங்கு செயற்பாடுகள் சில இரவுகள் நீடித்தன. சத்தியப் பிரமாணங்கள், கணினி பயன்பாட்டு விசாரணைகள் எல்லாம் தடல் புடலாக நடந்தது. காதுகள் கூசும் அசிங்கங்கள். வெட்கங்கெட்டவர்களின் மானத்தை இப்படித்தான் அல்லாஹ் வெளிப்படுத்துவான் போலும்.

போரடிக்கும் குழுக்களை இணைப்பதன் மூலம்தான் அந்த முடை நாற்றத்தை நீக்க முடியும் என்ற நிலைக்கு வந்த உலமா சபை இணக்கப்பாட்டின் விழிம்பு வரையில் இந்த வெட்கங் கெட்டவர்களை இழுத்து வந்தது. இணக்கப்பாட்டுக்கு இணங்கினார்கள் அல்லது இணங்குவது போல நடித்தார்கள். ஆளையாள் ஆரத் தவினார்கள். அங்கும் அல்லாஹு அக்கபர் ஒலித்தது. ”குமாரி” நாடகத்தின் சுப முடிவு அந்த கடைசி நள்ளிரவில். 

அவரச அவசரமான இணக்காப்பாட்டு ஒப்பந்தம் அப்போது தயாரிக்கப்பட்டது. நாளை விடித்ததும் இரு திறத்தாரும் நாடாளு மன்றத்தில் என்ன அறிக்கை வெளியிட வேண்டும் என்பதும் கூட அந்த ஆலிமசாக்கள் அவையிலே எழுதப்பட்டது. ”குமாரி” நாடகத்தின் முன்னிலைப் பாத்திரங்களும், நாடகத்தைப் பார்த்து நடுத் தீர்புச் சொன்ன ஆலிம்களும் மறு நாள் நாடாளு மன்றத்துககு சமுகம் தருவது என்றும் பொரு்தப்பட்டது.

மறுநாள் ஆலிம்களுக்கு பஜ்ர் தொழுகையுடன் நலமே விடி‌ந்தது. நம்பிக்கையின் வெள்ளிக் கோடுகள் அவர்கள் உள்ளத்தில் இலேசாகப் பளிச்சிட்டன. பஜ்ர் தொழுதாரோ இல்லையோ ஹக்கீமுக்கும் நம்பிக்கையுடன் பொழுது விடிந்தது. மும்மூர்திகளுக்கு விடியவே இல்லை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமற் போய்பிட்டது. சமுகம் வலிந்து ஆலிம்கள் அவையின் தோழிலே சுமர்திய கடமைப் பொறுப்பைச் சுமர்ந்து பாராளுமன்றம் வரை போன ஆலிம்கள் கடன் பட்டார் செஞ்சம் போல வெட்கித் தலைகுனிந்து, ஆயிரம் கிலோ இருப்புப் பாளமாய் கையளவு உள்ளங்கள் கனக்கத் தலைமையகம் திரும்பினார்கள்.

”நெற்றிக் கண்ணோடு ஒரு குழந்தை பிறந்துள்ளதாக செய்தி வரும் நாளில், யூரடீஸ் நதி வற்றியுள்ளதாக இறுதி அடையாளம் தென்படும் நாளில் ஊவா நோக்கி சாத்தானியங்கள் ஓடுகின்றன. அங்கு மற்றமொரு இன வெறிக்கு எண்ணெய் வார்க்கும் சொற்பொழிவுகளை நடாத்தப் போகின்றன. 

கடிகாரத்தின் இரண்டு முட்களும் சேர்ந்து சேர்ந்து பிரிகின்றன, பிரிந்து பிரிந்து சேர்கின்றன. அடிக்கடி எதிரும் புதிருமாக வருகின்றன ஆயினும் கடிகாரத்தில் அவைகளுக்காக வழங்கப்பபட்டுள்ள எல்லையைத் தாண்டி மற்றுமொரு கடிகாரத்தை அமைத்துக் கொள்வதில்லை. ஆளுக்கு ஆள் அபாண்டம் சொல்வதில்லை. மனிதன் தன் எல்லாத் தேவைக்காவும் அவைகள் பிரிவதையும், இணைவதையும், எதிரும் புதிருமாக நிற்பதையும் நம்பித்தான் வாழ்கிறான். இவர்களோ சேர்ந்து சேர்நது பிரிகிறார்கள், பிரிந்து பிரிந்து சேருகிறார்கள். பிரயும்போது சேற்றை அள்ளி ஆளுக்கு ஆள் வீசுகிறாரகள். முடை நாற்றம் தாங்காது முஸ்லிம் சமுகம் துடித்துப் போகிறது. 

ஊருக்கம் வெட்கம் இல்லை, உலகுக்கம் வெட்கம் இல்லை இதிலே இவர்களுக்கு வெட்கம் என்ன...?

Read 1614 times Last modified on Friday, 16 June 2017 16:46
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization