நாம் எதிர்பார்க்கும் அரசும் சமூக ஒழுங்கும் Featured

(0 votes)
Social Order
29 December
2011
Written by:
Social Order

அல்குர்ஆன் முழு மனித சமூகத்திற்குமான ஒரு நூல் என்பதுவும் முகம்மத் நபி அவர்கள் முழு உலகத்திற்கும் ஒரு அருட்கொடை என்பதுவும் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை. எனினும் உலகத்தில் அனைவரும் முஸ்லிமாக இல்லை. மறுபுறத்தில் மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அல்லாஹ்வின் ஏற்பாடும் இதுவே.

இவை அனைத்தையும் வைத்து நோக்கின்ற போது இஸ்லாம் இந்த உலகத்திற்கு நிரந்தரமான மாறாத்தன்மை பெற்ற கொள்கைகளையும் விழுமியங்களையும் அவ்வப்போது சமூக நிலைமைகளைக் கருத்திற்ககொண்டு கொள்கைகளுக்கும் விழுமியங்களுக்கும் இணங்க சட்டங்களையும் முன்வைத்துள்ளன.

இன்று நடைமுறையில் சட்டங்கள் பாராளுமன்றத்தால் இயற்றப்படுகின்றன. அவ்வப்போது சமூகத்தின் தேவைக்கு ஏற்ப சட்டங்கள் திருத்தப்படுகின்றன. எதிர்காலத்திலும் திருத்தப்படும்.  அந்தவிதத்தில் சட்டங்கள் வரலாறு நெடுகிலும் மாற்றத்திற்கு உட்படுபவை. சமூக நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றமடையக் கூடியவை. மாறாக விழுமியங்களும் கொள்கைகளும் நிரந்தரமானவையாக இருக்கலாம்.

அந்த வகையில் அல்குர்ஆன் முன்வைக்கும் கொள்கைகளும் விழுமியங்களும் நிரந்தரமானவை. காலமாற்றம் அதன் கொள்கைகளிலும் விழுமியங்களிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துப் போவதில்லை.

அத்துடன் இஸ்லாமியக் கொள்கைகளும் விழுமியங்களும் சர்வதேச விழுமியங்கள் என்றவகையில் முழு உலகத்தவர்களுக்கும் பொருந்தக் கூடியவை.

எனவே முஸ்லிமல்லாத அரசுகளும் இஸ்லாமிய கொள்கைகளையும் விழுமியங்களையும் அடிப்படையாக்க கொண்டு சட்டமியற்றினால் அவை இஸ்லாமிய சட்டமே. அந்தவகையில் முஸ்லிம்கள் பொரும்பான்மையல்லாத பாராளுமன்றங்களிலும் இஸ்லாமிய விழுமியங்களையும் கொள்கைகளையும் அடிப்படையாக்க கொண்டு சட்டமியற்றலை ஊக்குவிப்பதன் மூலமும் சட்டவாக்கத்தில் பங்களிப்பு செய்வதன் மூலமும் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம்.

அந்த வகையில் இலங்கையில் இஸ்லாமிய விழுமியங்களையும் கொள்கைகளையும் அடிப்படையாக வைத்து இலங்கைப் பாராளுமன்ற சட்டங்களிலும் ஏனைய விவகாரங்களிலும்  நாம் திருத்தங்களை முன்மொழியலாம். நமது விழுமியங்களும் கொள்கைளும் சர்வதேச விழுமியங்களாக இருப்பதனால் அதனடியாக நாம் முன்வைக்கும் சட்டவாக்கத் திருத்தங்களும் சமூக நலத்திட்டங்களும் அனைவராலும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும். அதன்மூலம் இஸ்லாமிய சட்டம் என்ற பெயரைத் தாங்காத போதும் எமது நாட்டு சட்டங்களை இஸ்லாமிய சட்டங்களாகவும் அனைவராலும் ஏற்றுக்ககொள்ளப் பட்ட சட்டமாகவும் மாற்றலாம்.

கிலாபா, ஷரிஆ என்ற விளப்பரப் பலகைகளுக்கு அப்பால் இஸ்லாமிய விழுமியங்களையும் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த நாட்டில் இஸ்லாமிய  இயக்கங்கள் இந்த நாட்டு மக்களுக்கு நலன் சேர்க்கும் விதத்தில் சட்டவாக்கத்திலும் ஏனைய அனைத்து சமூக செயற்திட்டங்களிலும் பங்களிப்பு செய்யத்தயாரா?

 

 • Azeem Salam  நமது விழுமியங்களும் கொள்கைளும் சர்வதேச விழுமியங்களாக இருப்பதனால் அதனடடியாக நாம் முன்வைக்கும் சட்டவாக்கத் திருத்தங்களும் சமூக நலத்திட்டங்களும் அனைவராலும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும். அதன்மூலம் இஸ்லாமிய சட்டம் என்ற பெயரைத்தாங்காத போதும் எமது நாட்டு சட்டங்களை இஸ்லாமிய சட்டங்களாகவும் அனைவராலும் ஏற்றுக்ககொள்ளப் பட்ட சட்டமாகவும் மாற்றலாம்...
 • Sheik Usthaz Mansoor http://www.youtube.com/watch?v=VqHEkPVfwHg (Usthaz Web Admin)
  www.youtube.com
  சமூகமாற்றம் ஒன்று எப்படி வரலாம் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் அதற்கான நிபந்தனைக...See More
   
 • Asim Alavi  In my view many European countries have sound Islamic values integrated into their laws. Some examples are laws related to fundamental rights. In some Scandinavian countries cruelty to animals in a serious crime, defamatory law is very stringent, environment protection...... you can count. The desired objectives these laws are the protection of human dignity, and the planet earth
   
   
 • Oru Pahirvu  எனவே முஸ்லிமல்லாத அரசுகளும் இஸ்லாமிய கொள்கைகளையும் விழுமியங்களையும் அடிப்படையாக்க கொண்டு சட்டமியற்றினால் அவை இஸ்லாமிய சட்டமே. அந்தவகையில் முஸ்லிம்கள் பொரும்பான்மையல்லாத பாராளுமன்றங்களிலும் இஸ்லாமிய விழுமியங்களையும் கொள்கைகளையும் அடிப்படையாக்க கொண்டு சட்டமியற்றலை ஊக்குவிப்பதன் மூலமும் பங்களிப்பு செய்வதன் மூலமும் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம்
   
 • Ummu Hana  How long we are going to talk about possible development in arab world alone and expect their influence on non-muslim countries to treat muslims equally as a citizen? Isnt it the time to turn our narrative to the local context?
   
 • Oru Pahirvu  முஸ்லீம் அரபுலகில் கடந்தகாலங்களில் நடந்த யுத்தங்களை எம் மண்ணில் தஃவாவுக்கான அம்சங்களாக கொண்டார்கள். தற்போது இஸ்லாமிய எழுச்சியை அம்சமாக கொள்கிறார்கள். ஆனால் எமக்குள்ள பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய தீர்வு என்ன என்பதை எம் தஃவாக்களம் முஸ்லீம் சமுகத்தில் முன்வைக்கவில்லை
   
 • Ummu Hana  எதிர்காலத்தில் இந்த மண்ணுக்கென்றே உள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்கான அடிப்படைகளை எப்படி இடுவது என்பது குறித்தும் அதன் மூலம் இந்த நாட்டில் ஒரு பங்களிப்பு சமூகமாக கௌரவமாக வாழ்வதற்கு எமது அடுத்த சந்ததிக்கு எப்படி வழியமைத்துக் கொடுப்பது என்பது குறித்தும் நேர்மையான வெளிப்படையான திறந்த கதையாடல்கள் மிக அவசியமாகும்.
   
 • Ummu Hana  இந்த நாட்டில் ஒரு பங்களிப்பு சமூகமாக மாறுவதற்கு எமக்கு எந்தத் தடையும் இருப்பதாகத் தெறியவில்லை. "நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து போதிய தெளிவின்மை" என்ற ஒரே ஒரு விடயத்தைத் தவிற
   
 • Ummu Hana  நாம் விரும்பியோ விரும்பாமவே எமது இஸ்லாமிய தஃவா எமது சமூகத்தைக் கல்வித்துரையிலிருந்து தூரமாக்குகின்றது.

  எமது நாட்டில் மதசார்பற்ற கல்வி நிலவுகின்றது. நாம் விரும்பினாலும் கல்வியை இஸ்லாமிய மயமாக்க முடியாது என்பது போன்ற கோஷங்கள் கல்வித்துரையில் நாம் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதனை வலியுருத்துவதனை விடவும் அத்துரையை எமது இளம் சந்ததிகளுக்கு அந்நியமாக்குவதில் பெரும் பங்களிப்புச் செய்துவருகின்றது.

 

Read 104042 times Last modified on Thursday, 17 October 2013 18:53
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization