பதில்: “சஹாபாக்களின் ஆரம்ப காலத்திலேயே பெண்கள் அரசியலில் ஈடுபட்டார்கள். இரண்டு தரப்பினர்களுக்கிடையில் ஒரு யுத்தம் நடந்தபோது – அதில் ஒரு தரப்புக்கு நபிகளாரின் மனைவி ஆயிஷா நாயகி தலைமை வகித்திருந்தார்கள். அரசியல் ரீதியாகப் பெண்கள் தலைமை வகிப்பதற்கு இஸ்லாத்தில் எந்தவிதமான தடைகளுமில்லை.
//நம் சமூகத்தில் பிரிந்துகிடக்கும் இரு எதிர் முரணான (மத சார்பான / சார்பற்ற) கல்வித் திட்டங்களும், பங்களிப்பும் ஒன்றிணைய வேண்டும்//
உண்மையில் இத்தகைய ஒரு பிரிவு நமது பங்களிப்பு இல்லாமையால் ஏற்பட்டதன் விளைவே அன்றி அது திட்ட வட்டமான புறக்கணிப்பாகக் கொள்வது பொருத்தமற்றது என்பதுவே எனது நிலைப்பாடாகும். உண்மையில் மதச்சார்பின்மை என்பது மதத்தின் மேலாதிக்க-மின்மையே தவிற அதன் மூலம் பங்களிப்புச் செய்வதனை மறுதலிப்பதன்று.
(கிலாபத் அரசாங்கம் ஒரு சமகாலப் பார்வை" எனும் எனது ஆக்கத்திற்கான மறுப்பு)
இஸ்லாமிய கிலபாத் என்ற எண்ணக்கரு சிறுபான்மை முஸ்லிம் நாடொன்றில் கோட்பாட்டு ரீதியாக மட்டுமே பேசப்பட முடியும். இதுதான் யதார்த்தம். இந்நிலையில் முஸ்லிம் சிறுபான்மை ஒன்றின் அரசியல் பங்களிப்பு கிலாபத் கோட்பாட்டுடன் ஒப்பிட்டு நோக்கப்படுவது பெரும்பான்மை, சிறுபான்மை என்ற இனக்குழுமங்களின் இயல்புநிலை குறித்த தெளிவின்மையின் தவறாகும்.