Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

இலங்கை இஸ்லாமியவாதிகளிடையே தத்துவம் (Philosophy) தொடர்பான கற்கைககளின் பரிச்சயம் குறித்து..

(0 votes)
இலங்கை இஸ்லாமியவாதிகளிடையே தத்துவம் (Philosophy) தொடர்பான கற்கைககளின் பரிச்சயம் குறித்து..
17 October
2013
Written by:

Ummu Hana:

இலங்கையில் இஸ்லாமியவாதிகள் தத்துவம் (Philosophy) தொடர்பான கற்கைகளை இஸ்லாமிய சிந்தனைக்கு முரணான ஒருவிடயமாக இலங்கை முஸ்லிம்களின் மனதில் மிக ஆழமாகப் பதித்துவிட்டனர்.

அடிப்படையில் இஸ்லாம்/அல்குர்ஆன் தத்துவார்த்தப் பார்வையை ஊக்குவிக்குகையில் இலங்கை இஸ்லாமியவாதிகள் ஏன் இத்தகைய முரண்நகையான நிலைப்பாட்டிற்கு வந்தனர்??

இது பற்றி உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகின்றேன்.



Oru Pahirvu:

தத்துவத்தின் முக்கியத்துவத்தை புரியாத தாஇக்களால் இஸ்லாத்தை நாகரிகத்துக்கு முகம்கொடுக்கும் சக்தியாக நிலைநிறுத்த ஒருபோதும் முடியாது. தாரிக் ரமழானின் தஃவாவின் மூச்சே தத்துவம்தான்

 

Ibrahim Nihrir:

கிணற்றுத் தவளைகள் என்னும் குறுகிய ஓர் அமைப்பினராக எம்மை நிர்ணயித்த பெருமை அவர்களையே சாரும்...

இலங்கை இஸ்லாமியவாதிகள் புராண சித்தாந்த கோட்பாட்டிலிருந்து வெளி வராமல் இருப்பதற்கு சமூகத்தின் மீது அவர்களுக்குள்ள பயம் பிரதான காரணமாகும்...

தத்துவத்துக்கு அடுத்த கட்டம் நாஸ்திகம் என்னும் சிந்தனை இன்னொரு காரணம்...

அடிப்படையை சிதைக்காத வண்ணம் இஸ்லாமிய மற்றும் ஏனைய தத்துவார்த்த விளக்கங்கள் வெளிவரவேண்டும்...

 

Ummu Hana:

Br Ibrahim Nihrir நீங்கள் குறிப்பிடுவது போன்று "தத்துவத்துக்கு அடுத்த கட்டம் நாஸ்திகம்" என்ற நிலைப்பாட்டிற்கு இலங்கை இஸ்லாமியவாதிகள் வருவதற்கான காரணம் என்னவாக இருக்கலாம்?

 

Ibrahim Nihrir :

வரம்பு மீறாத வண்ணம் ஆராயுங்கள்-புகுந்து விளையாடுங்கள் என்று இஸ்லாம் அனுமதி தந்தும் தம்மை சுற்றி அவர்கள் போட்ட அல்லது போடப்பட்டுள்ள கோட்டை விட்டு வெளியில் வர அவர்கள் விரும்புவதில்லை...ஈமான்+பொது அறிவு இரண்டிலும் உள்ள பலகீனம், தடை தாண்டினால் தடம் புரள்வோம் என்று அவர்களை சிந்திக்க வைக்கின்றது...


Mohamed Razmi :

தத்துவம் மட்டுமல்ல ஆரோக்கியமான விமர்சனக் கலாசாரத்தையும் குழிதோண்டிப் புதைத்தவர்கள் அவர்கள் தான்.

நேற்று புத்தளத்தில் நடந்த குத்பாவை விமர்சித்த நிஹ்ரிரை கட்டாரில் இருக்கும் ஒரு முரீது மறுமையின் பெயரால் எச்சரிக்கிறார்.

என்றுமே அவர்கள் நேருக்கு நேர் தமது நடத்தைக்கு பொறுப்புக் கூறும் வகையில் செயற்பட்டதில்லை.

எல்லாமே திரைமறைவு தான்....!

தமது அரசியல் பிரவேசத்தை வழமை போல தமது clandestine பாணியிலேயே புத்தளத்தில் ஆரம்பிக்கிறார்கள்!

 

Ummu Hana:

இலங்கை இஸ்லாமிய வாதிகளுக்குத் தத்துவத்துடன் ஏற்பட்ட பரிச்சயம் எதிர்மறையானது;

தத்துவம் ஒரு அறிவியல் துறையாக இலங்கை இஸ்லாமியவாதிகளிடம் வந்தடையவில்லை.

மாற்றமாக, இமாம் கஸ்ஸாலி அவர்கள் கிரேக்க நாஸ்திக சிந்தனையாளர்களை எதிர் கொண்ட விதம் தொடர்பான வாசிப்பின் மூலம்தான் இவர்களிடையே தத்துவம் என்ற சொல் பரிச்சயமாகின்றது.

விளைவாக, நாத்திகத்தையும் தத்துவத்தையும் ஒன்றாக முடிச்சுப்போட்டு விட்டார்கள்.

 

Read 76049 times Last modified on Thursday, 17 October 2013 19:57
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization