Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

மதசார்பற்ற கல்வித் திட்டமும் முஸ்லிம் சிந்தனையும் Featured

(0 votes)
மதசார்பற்ற கல்வித் திட்டமும் முஸ்லிம் சிந்தனையும்
24 September
2012
Written by:

 //நம் சமூகத்தில் பிரிந்துகிடக்கும் இரு எதிர் முரணான (மத சார்பான / சார்பற்ற) கல்வித் திட்டங்களும், பங்களிப்பும் ஒன்றிணைய வேண்டும்//

உண்மையில் இத்தகைய ஒரு பிரிவு நமது பங்களிப்பு இல்லாமையால் ஏற்பட்டதன் விளைவே அன்றி அது திட்ட வட்டமான புறக்கணிப்பாகக் கொள்வது பொருத்தமற்றது என்பதுவே எனது நிலைப்பாடாகும். உண்மையில் மதச்சார்பின்மை என்பது மதத்தின் மேலாதிக்க-மின்மையே தவிற அதன் மூலம் பங்களிப்புச் செய்வதனை மறுதலிப்பதன்று.

 

ஏனைய நாடுகளில் எப்படிப் போனாலும் இலங்கையைப் பொருத்த-வரை மதசிந்தனைகள் மூலம் அறிவியல் உலகுக்குப் பங்களிப்புச் செய்வோமெனில் அதனை எந்த ஒரு நிறுவனமும் புறக்கணிக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. (பங்களிப்பற்ற நிலையில் முன்மாதிரி என்று ஒன்று இல்லை.)

எனவே இன்றைய கல்விமுறைமைகள் யாவும் ஒருசில வித்தியாச-ங்கள் இருந்தாலும் கூட அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளே. குறை என்ன-வென்றால் நாம் நமது விழுமியங்களைப் பிரயோகித்து அம்முறைமைகளுடாகப் பங்களிப்புச் செய்யாமையும் இன்னொரு புரத்தில் அவற்றை இஸ்லாமியக் கல்வி முறைக்கு முரணான ஒன்றாக சித்தரிக்கும் சித்தாந்தக் குழப்பமுமே.

Ummu Eimaan நமது பங்களிப்பில் ஏற்படுத்தப்பட்ட பின்னடைவுக்குக் காரணம்திட்டமிட்ட மேற்கின் சதியே.இதனூடாக இருமுரன்பாட்டு கல்வி,சிந்தனையை ஏற்படுத்தியமையின் வெற்றியே இன்று நாம் அனுபவித்து வரும் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம் என்பது என்கருத்து.
    
உம்முஹனா உங்கள் கருத்தில் சிலவிடயங்களை மறைமுகமாக நியாயப்படுத்துவது போன்று தெரிகிறது.மிகவும் வெளிபடையாகவே மதச் சார்பற்ற உலகாயுதக் கல்வியும்,மதச் சார்பான மதரசாக் கல்வியும் இரு முரண்பாட்டு தீவிர முனைகளிலே காணப்படுவது நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.இதனை இணைக்கும் பாலமாகவே நவீன இஸ்லாமிய இயக்கங்கள் செயல்படுகின்றன.நீங்கள் சொல்வது போல் பங்களிப்புக்கள் மதச்சார் - மதச்சார்பற்ற இரு முனைக் கல்வி,சிந்தனைப் பாரம்பரியத்தில் இருந்தே தோன்ற வேண்டும் என்பதே எமது சுட்டலாகும்.அவாறு இல்லாத பங்களிப்புக்கள் பயன் எதுவுமளிக்காது என்பது மட்டும் உறுதி.

September 24, 2012 at 3:38pm via mobile · Like

      Ummu Hana  //நமது பங்களிப்பில் ஏற்படுத்தப்பட்ட பின்னடைவுக்குக் காரணம் திட்டமிட்ட மேற்கின்சதியே//

     வரலாற்றை மிகக் கவனமாக வாசித்தால் நீங்கள் குறிப்பிடும் மதசார்பின்மை இஸ்லாத்தைத் திட்டமிட்டு கருவறுப்பதற்காகக் கல்வித்துறையில் அறிமுகப் படுத்தப் பட்டதாக இல்லை. மாறாக கடந்த நூற்றாண்-டின் அறிவியல் எழுச்சியின் ஆரம்ப கட்டத்திலிருந்தே கிறிஸ்தவ அடக்குமுறை அறிவியல் மருமலர்ச்சிக்குத் தடையாக இருந்ததன் பின்னணியில் மதச்சார்பின்மை எனும் சொல்லாடல் மேற்கில் வலுப்பெற்றது.

இதன் மறுபக்கம் அரபுலகின் வீழ்ச்சியும் விளைவாக மேற்கில் இடம்பெற்ற துரித தொழில் நுட்ப வளர்ச்சி-யின் காரணமாக மேற்கில் கிடைக்கின்ற வசதிகளால் அரபு நாடுகளும் முஸ்லிம்களும் ஈர்க்கப்பட்டமையும் மேற்கத்திய வல்லரசுகள் தமது பொருளாதார நலன்-களுக்கு ஆதரவான எந்த ஒரு நாட்டினதும் அரசுக்குப் போதிய பாதுகாப்பளிக்கும் திட்டத்திற்கு இணங்க இன்று-வரை ஏனைய நாடுகளில் உள்ள எந்த ஒரு அரசியல் ஒழுங்குக்கும் ஆதரவு கொடுக்கும் நிலைமையுமே யதார்த்-தமான உண்மையாகும்.

அது மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தில் இஜ்திஹா-தின் வாயிலை நாமாக வேமூடிக்கொண்டமை, மேற்கின் தொழில் நுட்ப வளர்ச்சியால் எமது சமூகம் ஈர்க்கப் பட்டு கரைந்து செல்லாமல் பாதுகாப்பதற்காக மேற்கிடம் இருந்து வரும் அனைத்து விடயங்களையும் எம்மை அழிப்பதற்கான சதியாக நாம் உருவகித்துக் கொண்டமையுமே எமது வரலாற்றை உண்ணிப்பாக வாசிக்கும் ஒருவர், அதுவும் குறிப்பாக எமது சமூகத்-தை மீண்டும் பங்களிப்பு சமூகமாக (அல்குராணிய சமூகமாக) மாறவேண்டும் எனக் கணவுகாணும் ஒருவரால் வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.

மதச்சார்பின்மை குறித்து அறிஞர் ராஷித் அல் கானூஷி அவர்கள் குறிப்பிடுகையில் அரபுலகில் காணப்படும் பிரதான பிரச்சினை மதத்தை அரசியல் வட்டத்திலி-ருந்து சுதந்திரமாக்குவதே என்பதனை இங்கு நினைவூட்டுகிறேன்.

September 25, 2012 at 10:59am · Like
    
Source: https://www.facebook.com/groups/100000srilankans/permalink/208653659266000/

 

 

 

Read 257264 times Last modified on Thursday, 17 October 2013 18:46
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization