Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

தவறாக முன்வைக்கப்பட்ட “கிலாபாத்” கோட்பாடு: By Mohamed Nishad Featured

(0 votes)
தவறாக முன்வைக்கப்பட்ட “கிலாபாத்” கோட்பாடு: By Mohamed Nishad
09 September
2012
Written by:

(கிலாபத் அரசாங்கம் ஒரு சமகாலப் பார்வை" எனும் எனது ஆக்கத்திற்கான மறுப்பு)

இஸ்லாமிய கிலபாத் என்ற எண்ணக்கரு சிறுபான்மை முஸ்லிம் நாடொன்றில் கோட்பாட்டு ரீதியாக மட்டுமே பேசப்பட முடியும். இதுதான் யதார்த்தம். இந்நிலையில் முஸ்லிம் சிறுபான்மை ஒன்றின் அரசியல் பங்களிப்பு கிலாபத் கோட்பாட்டுடன் ஒப்பிட்டு நோக்கப்படுவது பெரும்பான்மை, சிறுபான்மை என்ற இனக்குழுமங்களின் இயல்புநிலை குறித்த தெளிவின்மையின் தவறாகும்.

எனினும் இஸ்லாமிய உலகில் தோன்றும் கிலாபத் ஆட்சியின் தாக்கம் திண்ணமாக முஸ்லிம் சிறுபான்மை நாடுகளிலும் பாரிய தாக்கம் விளைவிக்கும் என்ற அடிப்படையிலும், முஸ்லிம் சமூகம் கொள்கை அடிப்படையில் ஒரே உம்மத் என்ற அடிப்படையிலும் ,இஸ்லாமிய கிலபாத் முழு மனித இனத்தினதும் சுபீட்ஷமான வாழ்வுக்கு வழிவகுக்க கூடிய ஒரு ஆட்சிமுறை என்ற நோக்கிலும் ஒரு முஸ்லிம் கிலாபத் ஆட்சியை ஆஷிப்பதில் தப்பில்லை.

அல்குறான் இஸ்லாமிய ஆட்சியின் விளைவை திட்டவட்டமாக பல இடம்களில் குறிப்பிடுகிறது.

(( அவர்களுக்கு( முஹ்மீன்களுக்கு) பூமியில் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள் சகாதையும் கொடுப்பார்கள், நன்மையை ஏவி தீமையை தடுப்பார்கள்)) ( அல் ஹஜ்:41).

எனவே இஸ்லாமிய ஆட்சியின் விளைவுகள் இவை:

1- தொழுகையை நிலைநாட்டல்- முழுமையாக அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதகான அடையாளம்.

2- ஸகாதை உரியமுறையில் நிறைவேற்றல்.-இதன் மூலம் சமூக நீதியை நிலை நாட்டல்.

3- நன்மையை ஏவி தீமையை தடுத்தல்.- இதன் மூலம் முழு மனித இனத்தினதும் சுபீட்ஷமான வாழ்வுக்கு வழிகாட்டல்.

 

உண்மையான இஸ்லாமிய ஆட்சியின் வெளிப்பாடுகள் இவை.எனவே இறை அச்சத்தை அடிப்படையாக கொண்ட ஒரு மனித குழுமத்தின் மீதே இஸ்லாமிய ஆட்சி சாத்தியமாகும்.

இந்தவகையில் ‘பலவந்தமான காலனித்துவ போக்காக “ இஸ்லாமிய ஆட்சியை “ அடையாளப்படுத்த முயன்றுள்ள கட்டுரையாளரின் வாததுக்க்கு அல்குரானின் பதில் மட்டுமே போதுமானது.

அடுத்து, கில்புள் புலூல் உடன்படிக்கையை இஸ்லாமிய கிலாபத்துடன் ஒப்பிடுவது இஸ்லாமிய கிலாபத் குறித்த அறியாமையின் வெளிப்பாடாகும். கில்புள் ப்புலூல் உடன்படிக்கை நபி ( ஸல்) அவர்களின் நபித்துவதுக்கு 20 வருடங்களுக்கு முன்னர் குரைஷி கோத்திரத்தினரால் அநியாயம் இழைக்கப்படுவோரை காப்பற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கை.இதற்கு நபியவர்கலும் ஒத்துழைத்தார்கள். எனவே இது அநியாயத்துக்கு எதிரான இஸ்லாத்தின் நிலைபாட்டை தெளிவு படுத்தும் ஒரு நிகழ்வாகும்.

குறித்த கட்டுரையாளர் தடுமாற்றத்தோடு ஒரு கருத்தை முன்வைக்கிறார். “ நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன இஸ்லாம் அல்லாத ஆட்சியின் நிழலில் கிட்டுமெனின் அதுவும் இஸ்லாமிய ஆட்சிதான். எனவே இங்கு இஸ்லாம் என்ற கொள்கை முக்கியமன்று. மாற்றமாக மனிதனின் “ சுபீட்ஷமான வாழ்வே முக்கியம் “ என்றதொரு கற்பனை வாதம் முன்வைக்கப்படுகின்றது. முஸ்லிம் சிறுபான்மை நாடொன்றில் நிர்ப்பந்தமான ஒரு சூழலில் இக்கருத்து கோட்பாட்டு ரீதியாக பேசப்படமுடயும்.ஆனால் வரலாற்றிலிருந்து ஒரு உதாரணத்தையும் இதற்காக முன்வைக்க முடியாது.

உண்மையில் இத்தகைய கற்பனை வாதத்தை கால்மமார்கஸ் முன்வைத்து நடைமுறையில் பலமில்லியன் மக்களை கொன்றொழித்த வரலாறு மிகவும் தூரத்தில் இல்லை. நீதி , சுதந்திரம், ஜனநாயகம் என்ற பெயரில் இந்நிமிடம் வரை அமெரிக்கா கொன்று குவிக்கும் மனித உயிர்களின் எண்ணிக்கை முடிவற்றது. கடந்த நூற்றாண்டில் “ மேற்கத்திய ஏகாதிபத்தியம் “நீதி, சுதந்திரம், பாதுகாப்பு” என்ற போர்வையில் ஆபிரிக்க,ஆசிய நாடுகளை சுரண்டி, சூறையாடியதன் கொடுமையை நூற்றுக்கணக்கான நாடுகள் இன்னும் அனுபவிக்கின்றன.

எனவே “ தக்வாவின் “ அடியாக உருவாகாத ஒரு சமூகத்தில் நீதி , சுதந்திரம், ஜனநாயகம் என்பன வெறும் சுலோகங்களே அல்லது பாமரமக்களை ஏமற்றுவதற்கான வெறும் கோஷங்களே. காலனித்துவத்தின் விளைவாக தற்காலிகமாக இஸ்லாமிய உலகு சர்வாதிகாரமயப்பட்டதாக காட்டப்பட்டாலும் இன்ஷாஅல்லாஹ் இஸ்லாமிய உலகு தக்வாவை அடிப்படையாக கொண்ட உண்மையான நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பவற்றின் பால் மீளும் நாள் வெகுதொலைவில் இல்லை.   يوسف : 21(( وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ ))

  நன்றி: https://www.facebook.com/mohamed.nishad.397


Ummu Hana  நான் இஸ்லாத்தின் இலக்கு உலகில் சுபிட்சமான வாழ்வை அனைத்து மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப் பதுதான் என்று குறிப்பிடுகின்ற போது அதனை சரியாகப் புரிந்துகொள்ளாமல் எம்மதமும் சம்மதமாகக் குறிப்பிடுவதாகவும் இஸ்லாம் என்ற கொள்கையை விடவும் சுபீட்சமான வாழ்வே முக்கியம் என்று குறிப்பிடுவதாகவும் கருத்துரைப்பது .........?????
    September 9, 2012 at 7:45pm · Like
     
  Ummu Hana  அரசில் பங்களிப்பு என்பது சமூகத்தில் சமூக விவகா ரங்களான பாதுகாப்பு சுதந்திரம் நீதி என்பவற்றை உறுதிப்படுத்தலே. இத்தகைய ஒரு அரசியல் ஒழுங்கின் பன்மைத்தவப் பண்பை ஹில்புல் புலூல் உறுதிப் படுத்துகின்றது. இதனால்தான் தூதர் (ஸல்) மக்கா வெற்றிக்குப் பின்பும் நபித்துவத்திற்கு 20 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது போன்ற இன்னொரு நிகழ்வில் பங்குபற்ற ஆசைப்படுவதாகக் குறிப்பிட்டு ள்ளார்கள்.
    September 9, 2012 at 7:46pm · Like
     
   Mohamed Nishad · Friends with Azeem Salam and 51 others
மதிப்புக்குரிய கட்டுரையாளர் அவர்களே: நான் ஒன்றும் கற்பனையில் எழுதவில்லை. நீங்கள் எழுதிய கீழ்வரும் வார்த்தைகள் குறித்த இஸ்லாமிய பார்வையை ஆதரபூர்வமாக முன்வெய்த்துள்ளேன்.
இவ்வார்த்தைகளுக்கு மறை முகமான அர்த்தம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

 -“ அத்துடன் முஸ்லிமல்லாதவர்களால் முன்வைக்கப் படுகின்ற எந்த ஒரு வழிமுறையாயினும் அவை அல்குரானிய விழுமியங்களுக்கு இணங்க இருக்கும் பட்சத்தில் அவை இஸ்லாமிய விழுமி யங்களே. முஸ்லிமல்லாத ஒரு அரசாங்கமாக இருப்பினும் அவ்வரசு அல்குராணிய விழுமியங் களான நீதீ சுதந்திரம் பாதுகாப்பு என்பவற்றை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்தும் எனின் அவ்வர சாங்கத்தின பெயரும் கிலாபா அல்லது கிலாபாவை ஒத்த அவ்வப்போது சீர்திருத்தங்களை வேண்டி நிற்கின்ற அரசு என்றே கருதப்படல் வேண்டும்.” -

இஸ்லாமியப்பார்வை:-
     
(( அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே )) ( ஆல இம்ரான்: 19 ) .

ஒன்றில் அல்லாஹ்வின் சட்டம் அல்லது மனித சட்டம்.

( ஒரு முறை உமர் (ரழி) அவர்கள் தவ்ராத் வேதத்தின் வாசகம் அடங்கிய ஒரு ஏட்டை கையில் வைத்திருந்தார்கள். இதனை கண்ட நபியவர்கள் கடுமையாக கோபப்பட்டு சொன்னார்கள் “நிச்சியமாக மூஸா (அலை) உயிருடன் இருந்தாலும் என்னை பின்பற்றுவதை தவிர அவருக்கு வேறு வழி கிடையாது “ ). ( முஸ்னத் அஹ்மத்:3/338 ).

இஸ்லாம் கிடைத்த பின்னர் தவ்ராத்தை பின்பற்ற அனுமதியில்லை எனின் அடுத்த மனித கொள்கைகளின் நிலையை கூறத்தேவையில்லை.

இர்பாஸ் பின் ஸாரியா (ரழி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இறைத்தூதர் ( ஸல்) அவர்கள் ஒரு உபதேசம் செய்தார்கள் அதனை கேட்டு உள்ளங்கள் அஞ்சின. கண்கள் கண்ணீர் வடித்தன.எனவே நாம்” அல்லாஹ்வின் தூதரே! இது ஒரு இறுதி உபதேசம் போல் இருக்கிறது எனவே எம்மீது சுமத்தும் பொறுப்பு என்ன என கேட்டோம்.அதற்கு நபியவர்கள் இரவும் பகலை ஒத்த வெண்மையான பாதையில் உங்களை விட்டுள்ளேன்.. யார் அதனை விட்டு விலகி விடுகிறாரோ அவர் அழிந்து விடுவார் என்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத் : 4/126 )

உமர்( ரழி ) அவர்கள் கூறினார்கள் இஸ்லாத்தின் மூலம் அல்லாஹ் எம்மை கண்ணியப்படுத்தினான். எனவே நாம் இஸ்லாம் தவிர்ந்த வேறு ஒன்றின் மூலம் கண்ணியத்தை தேடினால் அல்லாஹ் எம்மை இழிவு படுத்தி விடுவான்).( முசானப் இப்ன் அபீ சாய்பா:13/41)

எனவே மேலே குறிப்பிட்ட ஆதரங்களின் அடிப்படையில் இஸ்லாம் தவிர்ந்த வேறொரு கொள்கையின் பின்புலத்தில் இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களை அடையலாம் என எதிர்பார்ப்பது இஸ்லாமிய நோக்கில் பாரிய சிந்தனை பிறழ்வாகும்..

அப்படியாயின் சிறுபான்மை முஸ்லிம் நாடொன்றில் எப்படி வாழ்வது என ஒரு கேள்வியை முன்வைக்கலாம். இங்குதான் சிறுபான்மை முஸ்லிம்களுக்கான “ சட்ட ஒழுங்கு “என்ற எண்ணக்கரு இஸ்லாமிய விதிமுறைகளுக்கு இணங்க வகுக்கப்பட வேண்டயுள்ளது. இங்கு நிர்ப்பந்தம் ,விதிவிலக்கு ,இருதீமைகளில் பாதிப்பு குறைந்த தீமை போன்ற விதிகளின் அடிப்படையில் முடிவுகளுக்கு வரல் . இது இத்துறைசார் நிபுணர்களின் பணியாகும்.

ஆனால் ஒரு முஸ்லிமின் அடிமனதில் இஸ்லாம் மட்டுமே மனிதனுக்கு வழி காட்டக்கூடியது என்ற நம்பிக்கை மிக ஆழமாக இருத்தல் வேண்டும். இதுவே ஈமானின் அடிப்படையாகும்.
    September 10, 2012 at 12:35am · Like · 1
     
  Ummu Hana  நீங்கள் முன்வைக்கின்ற எந்த வாதமும் எனது கருத்தை மறுதலிப்பதாக இல்லை.

ஆரம்பத்தில் உங்களது இந்த வாசகத்தை 'ஒரு முஸ்லி மின் அடிமனதில் இஸ்லாம் மட்டுமே மனிதனுக்கு வழி காட்டக்கூடியது என்ற நம்பிக்கை மிக ஆழமாக இருத் தல் வேண்டும். இதுவே ஈமானின் அடிப்படையாகும்.' பூரணமாக மனப்பூர்வமாக விசுவாசிப்பதன் விளைவா கவே தொடர்ந்தும் இது குறித்து எழுதுகின்றேன்.

எனது கருத்தை இன்னொரு விதத்தில் குறிபிடுவதா யின் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்பது ஒரு முஸ்லிம் தனிநபரதும் அல்குரானிய விழுமிய ங்களை ஏற்றுள்ள ஒரு சமூகத்தினதும் கடமையாகும். இதன் கருத்து ஏற்கனவே சமூகத்தில் இருக்கின்ற ஒரு நன்மையை அது முஸ்லிம்களால் இஸ்லாத்தின் பெயரால் முன்வைக்கப்படவில்லை என்பதற்காக மறுப் பதாகவும் அதே நன்மையை நாம் இஸ்லாமிய... அடை மொழியிட்டு ஆரம்பத்திலிருந்து ஒரு இஸ்லாமிய அரசின் கீழ் அறிமுகப்படுத்தினால்தான் ஏற்போம் என்ற வாதம் அல்குரானின் பார்வையில் பலவந்தப்படுத்த லாகும்.

ஒரு அரசாங்கம், முஸ்லிமாயினும் சரி முஸ்லிம- ல்லாத அரசாயினும் சரி, அல்குரான் ஒரு அரசிடம் எதிர்பார்ப்பது போன்று நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துமாயின் அதனை மீண்டும் அழித்துவிட்டு இஸ்லாமிய அரசின் பெயரில்தான் அதனை முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நன்மையான ஒரு விடயம் சமூகத்தில் ஏற்கெனவே இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக்கொள்வதும் ஊக்குவிப்பதும் தான் நன்மையை ஏவுதல் என்பதன் கருத்தாகும்.

நான் இதன் மூலம் குறிப்பிடவருவது என்னவெனில் இலங்கையில் அரசியல்யாப்பில் அநேகமான பகுதி நீதி, பாதுகாப்பு, சுதந்திரம் என்பன எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்பதனைக் கோட்பாட்டளவில் ஒத்துக்கொள்கின்றது. எனவே இங்கு இலங்கை அரசியல்யாப்பில் காணப்படும் நீதி, பாதுகாப்பு, சுதந்திரம் போன்ற கோட்பாடுகள் எமது இஸ்லாமிய அரசியல் கோட்பாடுமாகும் என்பதனை எமது நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் தெறியப்படுத்துவதும் இதற்கு அடுத்த கட்டமாக நீதி, பாதுகாப்பு, சுதந்திரம் என்பவற்றை நடைமுறையில் கொண்டு வருவதற்கு அவ்வரசியல் யாப்பில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் என்ன என்பதனையும் இதனை எத்தகைய வழிமுறைகள் மூலம் நடைமுறை- க்குக் கொண்டுவருவது என்பது குறித்த பங்களிப்புமே இந்த நாட்டில் நாம் மேற்கொள்ள வேண்டிய அரசியல் பணியாகும்.

இதனை இன்னொரு வசனத்தில் குறிப்;பிடவதாயின் இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு இருக்க வேண்டிய அநேக பண்புகள் இலங்கை அரசியல்யாப்பில் குறைந்த பட்சம் கோட்பாட்டளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதனை சீர்திருத்தங்களுக்கு உட்படவேண்டிய கிலாபாவின் அநேக பண்பக்கூறுகளைக் கொண்ட அரசியல்யாப்பைக் கொண்ட அரசு என்று ஏற்றுக் கொள்வதன் மூலம் இலங்கையில் அரசியல் களத்தில் எமது விழுமியங்கள் மூலம் பங்களிப்புச் செய்து இஸ்லாமிய விழுமியங்களை நடைமுறைப் படுத்துவதன் மூலம் (இவற்றுள் அநேமானவை கோட்பாட்டளவில் தேசிய விழுமியங்களுமாகும்) இஸ்லாம் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் அருள் என்பதனை நடைமுறையில் காட்டுவோம்.
    September 10, 2012 at 6:08am · Like · 1

 

Read 136980 times Last modified on Thursday, 17 October 2013 18:51
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization