Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

நமது சமூகத்தில் நிலவும் திருமண ஒழுங்கு குறித்து

(0 votes)
நமது சமூகத்தில் நிலவும் திருமண ஒழுங்கு குறித்து
28 March
2012
Written by:

நமது சமூகத்தில் நிலவும் திருமண ஒழுங்கு எந்தளவுக்கு இஸ்லாமிய விழுமியங்களைப் பேணியதாகவும், சரியாகப் புரிந்துகொண்டதாகவும், இஸ்லாம் முன்வைக்கும் பெருமானங்களைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது?

இன்னொரு விதத்தில் கேட்டால் திருமணவாழ்வு குறித்தும் தனது வாழ்க்கைத் துணைவரை அல்லது துணைவியரைத் தெரிவு செய்யும் விதம் குறித்தும் நமது நடைமுறைக்கும் இஸ்லாமிய விழுமியங்களுக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கின்றது?

இன்னும் விரிவாகக் குறிப்பிடுவதாயின் காதல் திருமணம், குடும்ப அங்கத்தவர்கள் பிரேரணையின் பேரில் அவர்களது தெரிவின் பிரகாரம் தனது வாழ்க்கைத் துணையைத் தீர்மாணித்தல் என்பதற் -கப்பால், வாழப்போகும் இருவரது விருப்பங்கள், வாழ்வு குறித்த கணவுகள், எதிர்கால இலட்சியங்கள், எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள், அவற்றை எதிரக்கொள்ளும் விதம் என்பவை குறித்தும், பொதுவாக திருமணமான பின் எதிர்கொள்ள நேரிடும் குடும்பரீதியான, கலாச்சார ரீதியான பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அவற்றை எதிர்கொள்ளும் விதம் என்பவை குறித்து நிச்சயம் ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்ப விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் திருமணத்திற்கு முன்பே சில அடிப்படைகளைத் தெறிந்தாக வேண்டும்.

இதற்கான அறிவூட்டல் முறைமை எமது சமூகத்தில் காணப்படுகின்றனவா?

இத்தகைய ஒரு அறிவூட்டல் முறைமையை எமது சமூகத்தில் கட்டமைப்பதன் மூலம் பல்வேறு பட்ட குடும்ப ரீதியான பிரச்சினைகள் அதன் ஆரம்பகட்டத்திலேயே தவிர்க்கலாம் என்பது எனது அபிப்பிராயமாகும். 

 இது குறித்து உங்கள் கருத்து என்ன?

 

 • Ummu Eimaan  சகோதரி Ummu Hana இன்றைய காலத்தில் கட்டாயம் ஆராயப்பட வேண்டிய ஒரு தலைப்பை இங்கு பதிவு செய்திருப்பது மகிழ்ச்சி தரும் விடயம்.
  திருமணம்,குடும்பவாழ்வு என்பன நமது தலை எழுத்தை நிர்ணயிக்கின்ற ஒரு விடயமாகத்தான் நான் கருதுகிறேன்.ஒரு சாலிஹான ஆணுக்கோ பெண்ணுக்கோ ஒரு
  சாலிஹான துணை கிடைப்பது என்பது அல்லாஹ்வின் அருளே!
   
  உண்மையில் ஒரு திருமணம் இஸ்லாமிய முறையில் நிகழ்ந்தாலும் துணையைத் தெரிவு செய்வதிலிருந்து திருமணச்சடங்குகள்,திருமணத்தின் பின்னாக மற்ற குடும்ப அங்கத்தவர்களோடு சேர்ந்து வாழும் முறைகள் இவை ஊருக்கு ஊர வேறு வேறாகவே இருக்கிறது.அது ஊருக்குரிய தனிப் பண்புடன் இருப்பது தவிர்க்கமுடியாதது.அனாலும் பொதுவான இஸ்லாமிய விழுமியங்கள் உடனான திருமண ஒழுங்கு ஒன்று பற்றி சிந்திப்பது அவசியம்.
   
  திருமணத்தின் போதான துணைத் தெரிவும்,திருமண நடைமுறை ஒழுங்கு பேணுவது தொடர்பிலும் நமது இன்றைய பிள்ளைகளுக்கு மிக அதிகபட்ச சுதந்திரம் இருப்பதாகவே எண்ணுகிறேன்.இதனை இஸ்லாமிய மயப்படுத்த அவர்களுக்கு நிச்சயம் ஆண்மீக அறிவும்,வாழ்வின் எதார்த்தத்தைத் தூர நோக்கோடு சிந்திக்கின்ற ஆற்றலையும் அவர்கள் மத்தியில் வளர்க்க வேண்டும்.இதற்கு முக்கியம் பெற்றோர் முன்மாதிரியாகவும்,வழிகாட்டியாகவும் இருந்து செயற்பட வேண்டும்.
   
  நாம் எப்போதும் நல்ல இலட்சியங்களுக்காக கனவு காணும் போது அதை அடைந்து கொள்வதில் ஏற்படப் போகும் கஷ்ட்டங்களையும்,தடைகளையும் சேர்த்து கனவுகாண்பதில்லை. நடைமுறைக்கு வரும்போதுதான் அதிலிருக்கும் முட்களை கண்டுகொள்கிறோம்.திருமண வாழ்வும் அதுபோன்றதுதான்.கற்பனை உயர்வாக இருக்கும்.அது நியாயமானதுதான்.அனாலும் அங்கும் கஷ்ட்டங்களும்,வேதனைகளும்,மனக் கசப்புகளும் ஏற்படலாம் என்ற உண்மையையும் நாம் கொஞ்சம் ஜீரணித்துத்தான் ஆக வேண்டும்.
   
  அதற்காக பொறுமை,சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு, மன்னிக்கும் மனம், எதற்கும் ஆத்திரப்படாமல் நிதானமாக சிந்திக்கும் ஆற்றல்,மனித பலம் பலவீனம் இவற்றைப் புரிந்து கொள்ளும் திறன் இதுபோன்ற நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
   
  உயிரோட்டமான திருமண வாழ்வை கொண்டு செல்வதாயின்,அதில் இணைய விரும்பும் அனைத்து தனி நபரும் சிறந்ததொரு ஆண்மீக பயிர்ச்சிக்குள் கட்டாயம் உள்வாங்கப்பட வேண்டும்.இது சாதாரண இஸ்லாமிய பாடத்தைப் படித்து அல்லது ஒரு கலந்துரையாடலில் முடியும் ஒரு விடயமன்று.கட்டாயம் ஒரு கூட்டு முயர்ச்சியுடனான,அதாவது நம் சமுகத்தின் மத்தியில் இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுடன் சேர்ந்து இயங்குவதன் உடாகவே இதனை சாத்தியப்படுத்தலாம்.திருமணம் போன்று அனைத்து விடயங்களுக்கும் ஒரு குறித்த இயக்கம் என்றால் ஒழுங்குகளும்,கட்டுப்பாடுகளும்,அறிவூட்டல் முறை ஒன்றும் அதனை நடைமுறைப்படுத்தும் செயத்திட்டங்களும் இருக்கும்.அதன் பிரகாரம் ஒரு தனிநபரை அந்த இயக்கம் வளர்த்து எடுக்குமாயின் ஆரோக்கியமான குடும்ப வாழ்வை,அதில் எதிர் வரும் சவால்களையும் தாண்டி அவனால் நிச்சயம் கட்டி எழுப்ப முடியும்.இது ஒன்றுதான் நடைமுறை சாத்தியமுமாகும்.

  .
   
   
 • Ummu Hana  சகோதரி Ummu Eimaan உங்களது அருமையான பங்களிப்பக்கு எனது நன்றிகள். உங்களுக்கு அல்லாஹ் அருள்புரியட்டும்.

  திருமணம், குடும்பவாழ்வு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் மற்றும் குழும்பவாழ்வில் பொதுவாக எதிர்கொள்ளும் சிக்கல்களும் அதனை நிவர்த்தி செய்துகொள்வதாற்கான ஆல
  ோசனைகளை வழங்குவதும் எமது சமூகத்தில் பெற்றோர்ருடன் நிறுத்திக்கொள்வதனை விடவும் இதுகுறித்த பலதரப்பட்ட கற்கைகளும் ஆய்வுகளும் அழகான ஒரு குடும்பத்தைக் கட்டமைப்பதற்கு மிக அவசியமாகும்.

  இதனைப் பெற்றோருடன் மாத்திரம் நிறுத்திக்கொள்வது அவ்வளவு ஆரோக்கியமானதாகத் தோன்றவில்லை.
   
 • Haifa HamdhaFirst & foremost thing that we should clarify what is Islamic Teachings in related to this & what are the cultural comings..because still people have confusion in clarifying culture & religion perspectives. Next step that the both girl & boy should educated at least the basic aspects of marriage. But this educating system we couldn't find in our society. If there is some means of education on this its only for girls. Mostly boys & girls they ease in falling emotions & feelings they think those emotions & feelings are going to lead a Marriage life.
   
  Education on this for boy & girl is basic need. If we go more deep we should educate parents also to understand the value of selecting girl or boy for their children without harming the feelings of their children.
   
 • Oru Pahirvu  ஈஜாப் கபூல் என்ற நிலையில் மிகச்சாதாரண நிகழ்வே திருமணம். வலீமா ஒரு சுன்னத்தான நிகழ்வு. இவையன்றி ஒட்டியுள்ள பாராம்பரிய நிகழ்வுகளே விமர்சனத்துக்குறியவை. என்றாலும் அலி ரலி அவர்களின் திருமணத்தின்போது, கடற்கரை மண்ணால் வீட்டுமுற்றம் அலங்கரிக்கப்பட்டதாகவும், யெமன் தேச ஈச்சமரப் பட்டைகளால் வேயப்பட்ட கட்டில் விரிப்பு பயன்படுத்தப்பட்டதாகவும், -த முஹம்மத்- என்ற நூலில் வாசிக்ககிடைத்தது திருமணத்தை அலங்கரித்தல் என்பதை சற்று ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
   
 • Ummu Eimaan Ummu Hana இங்கு நீங்கள் எதிர்பார்க்கும் களமாக ஒரு இஸ்லாமிய இயக்கம் இருக்கவேண்டும் என்பதில் ஏன் நீங்கள் இரு கருத்துக்கு வருகிறீர்கள் என்றுதான் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது?
   
 • Marx Anthonisamy  இஸ்லாத்தில் திருமணம் என்பதன் பொருளென்ன, மற்ற கருத்தாக்கங்களிலிருந்து அது எங்கே வேறுபடுகிறது, இன்றைய நிலையில் அது எவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது என்பன முக்கியமான கேள்விகள்? விரிவாக விவாதிக்கப் பட வேண்டியவை
   
 • Ummu Hana  சகோதரீ... Ummu Eimaan , நமது இஸ்லாமிய இயக்கங்களின் வளங்கள், பலம் என்பன குறித்து வெளிப்படையாக எந்த முடிவுக்கும் வரமுடியாத நிலையில் சமூகத்தின் அனைத்து விவகாரங்களு க்குமான பொறுப்பை அவற்றின் மீள் தினிப்பது நியாயமற்ற ஒரு செயலாகும்.

  மானுட சமூகத்தின் நலன் தொ
  டர்பில் உழைத்தாக வேண்டிய ஒவ்வொரு முஸ்லிமினதும் தார்மீகக் கடமை குறித்தே எனது கவணத்தை இங்கு குவித்துள்ளேன். இது இஸ்லாமிய இயக்கங்களின் பங்களிப்பையோ வகிபாகத்தையோ குறைத்து மதிப்பிடு வதாக அமையாது. எனினும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டு வருவது போன்று இஸ்லாமிய இயக்கங்கள் தனது செயற்பாடகள் குறித்து மீள்பார்வை செய்வதுவும் ஏனைய இயக்கம் சாராத ஆய்வாளர்களின் ஆய்வறிக்கைகளைக் கவணத்திற் கொண்டு தனக்குள்ளே மாற்றம் தொடர்பில் சிந்திப்பதுவும் மிக அவசியமாகும்.
   
 • Ummu HanaMarx Anthonisamy   //இஸ்லாத்தில் திருமணம் என்பதன் பொருளென்ன, மற்ற கருத்தாக்கங்களிலிருந்து அது எங்கே வேறுபடுகிறது, இன்றைய நிலையில் அது எவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது என்பன முக்கியமான கேள்விகள்? விரிவாக விவாதிக்கப் பட வேண்டியவை//

  இக்கருத்தில் நான் முழுமையாக உடண்படகின்றென்.

  திருமணம் பற்றிய இஸ்லாமிய சிந்தனை எவ்வாறு தனித்தமானது என்பது குறித்து மிகச்சரியாக நாம் முன்வைத்தாக வேண்டிய கடப்பாடு எமக்குண்டு.
   
 • Abdul Samad Mohamed Akram  இஸ்லாத்தில் திருமணம் என்பது பற்றியும் குடும்ப வாழ்வு பற்றியும் நிறையவே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன, அவை தமிழ் மொழியில் கூட கணிசமானளவு காணப்படுகின்றன, சகோதரி உம்மு ஹனா ஒரு விடயத்தைப் புரிந்து கொள்வது நல்லது என நினைக்கின்றேன், உங்களது வாசகங்கள் இது பற்றிய விவகாரங்களில் நாம் புச்சிய நிலையில் இருக்கிறோம் என்பது போன்ற மனநிலையைப் பிரதிபளிக்கின்றது, உண்மை அவ்வாறல்ல தெளிவு நிலைகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை, அவை மக்கள் மயப்படுத்தப்பட்டமையில்தான் பிரதான குறைபாடு இருக்கின்றது, அதனை தனிப்பட்ட முயற்சிகளால் நிச்சயமாக வெற்றி கொள்ள முடியாது, கூட்டான முயற்சிகளே இலக்கை நோக்கி பயனிக்க வல்லன, அந்த முயற்சி என்னிடத்திலும் நான் அங்கத்துவம் வகிக்கும் ஜமாஅத்திலும் மிகத் தெளிவான வேலைத்திட்டமாகக் காணப்படுகிறது, விரும்பினால் வந்து பங்கு கொள்ளலாம்.
   
 • Ummu Eimaan  Ummu Hana உங்கள் விவாதம் எல்லாம் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு எண்ணைக்காக அலைவது போலத்தான் இருக்கிறது.ஆய்வாளர்களும் ஆய்வறிக்கையும் தேவை இல்லை என்று சொல்லவரவில்லை.நம் கண்முன் இருக்கின்ற இஸ்லாமிய இயக்கங்களாகிய மிகப்பெரும் வளங்களை பிரயோசனப்படுத்தும்படியே கேட்கிறேன்.அங்கும் நீங்கள் எதிர்பார்க்கும் செயத் திறன்மிக்க உள்ளங்களும்,ஆய்வாளர்களும் ஆய்வறிக்கைகளும் நிறைந்தே இருக்கின்றன. எதையும் தள்ளி நின்று எடைபோடுவதோ,விமர்சிப்பதோ நியாயமாகாது.எதிலும் குறைகள் இல்லாமல் இருப்பது யதார்த்தம் இல்லை. அதிலுள்ள நிறைகளைக்கொண்டு எப்படி சமூகத்தை மாற்றியமைப்பது பற்றி சிந்திப்பதே உசிதமானது.நீங்கள் என்னதான் தனியே நின்று சாதிக்க துடித்தாலும் கடைசியில் காட்டில் எறித்த நிலவுதான்!
   
  / நீங்கள் குறிப்பிடும்ஒரு முஸ்லிமின் தார்மீகக் கடமையை அவன் பூரணமாக நிறைவேற்ற வேண்டுமாயின் நிச்சயம் அவன் சிந்தனை ரீதியாக பண்படவேண்டும்,ஆன்மீகப் பலம் வேண்டும்.அப்போதுதான் அவனால் மற்றவரை மாற்றமுடியும்.இதற்க்கான ஒரே ஒரு வழி அவன் இயக்கங்களுக்குள் உள்வாங்கப்படவேண்டும்! இல்லையேல் நீங்கள் என்னதான் கருத்துக்கொண்டு வந்தாலும் கிராமப் பழமொழி ஒன்று சொல்வதுபோல் "சேலைக்கு மேல் சொறிந்து சரிவருமா?! !!" என்ற கதைதான்.எமது சமூகத்திலுள்ள எந்தப் பிரச்சினையானாலும் அதற்கான ஒரே தீர்வு தனிமனித பயிற்சி!!! அதற்க்கு ஒரே வழி இஸ்லாமிய இயக்கம்!!!!!!
   
  //////////Ummu Hana //////////////இங்கு நீங்கள் எதிர்பார்க்கும் களமாக ஒரு இஸ்லாமிய இயக்கம் இருக்கவேண்டும் என்பதில் ஏன் நீங்கள் இரு கருத்துக்கு வருகிறீர்கள் என்றுதான் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது? ////////
   
 • Abdul Raheem Mohamed Inas  //இதற்கான அறிவூட்டல் முறைமை எமது சமூகத்தில் காணப்படுகின்றனவா?

  //இத்தகைய ஒரு அறிவூட்டல் முறைமையை எமது சமூகத்தில் கட்டமைப்பதன் மூலம் பல்வேறு பட்ட குடும்ப ரீதியான பிரச்சினைகள் அதன் ஆரம்பகட்டத்திலேயே தவிர்க்கலாம் என்பது எனது அபிப்பிராயமாகும்.
   
  இது குறித்து உங்கள் கருத்து என்ன?// அறிவூட்டல் முறைமைகள் இன்று அளவுக்கதிமாக இருக்கின்றன.
  வானொலி, தொலைக்காட்சி அது மட்டுமல்ல இயக்கங்கள், இஸ்லாமிய நிறுவனங்கள்,
  சஞ்சிகைள் பத்திரிகைகள்.
   
  பிரச்சினை என்னவெனில் அவற்றை நடைமுறைபடுத்துகிறார்களா? என்பதே.....
   
  அல்லது
   
  நடைமுறைசாத்தியமான அறிவூட்டல் முறைகளா? முன்கைக்படுகிறது.
   
  மற்றப்படி இது தொடர்பான அறிவூட்டல் சமூகத்தில் இல்லை என்று கருத முடியாது.
   
 • Ummu Hana  சகோதரர் Abdul Samad Mohamed Akram நமது சமூகத்தில் நிலவும் திருமண ஒழுங்கு எந்தளவுக்கு இஸ்லாமிய விழுமியங்களைப் பேணியதாகவும் சரியாகப் புரிந்துகொண்டதாகவும் இஸ்லாம் முன்வைக்கும் பெருமானங்களைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது?

  இன்னொரு விதத்தில் கேட்டால் திருமணவா
  ழ்வு குறித்தும் தனது வாழ்க்கைத் துணைவரை அல்லது துணைவியரைத் தெரிவு செய்யும் விதம் குறித்தும் நமது நடைமுறைக்கும் இஸ்லாமிய விழுமியங் களுக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கின்றது?
  இது குறித்து உங்களது கருத்துக்களை அறிய விரும்பகின்றென்.

  சகோதரரே (Abdul Samad Mohamed Akram)

  நீங்களோ அல்லது நீங்கள் சார்ந்த இஸ்லாமிய இயக்கமோ இது குறித்து வெளியிட்டுள்ள கட்டுரைகள், ஆக்கங்கள், வீடியோ, ஓடியோ பிரதிகள் ஏதும் இருப்பின் அவை குறித்தும் இங்கு பகிர்ந்து கொள்வீர்களா?
   
 • Ummu Hana  மக்கள் மயப்படுத்துவதற்கான சாதனங்களைக் கொண்டுள்ள நிலையிலும் நமது இஸ்லாமிய இயக்கங்கள் நமது கருத்துக்களை முன்வைக்காமல் இருக்கும் நிலையில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு வெளியில் உள்ள 99 சதவிகிதமான முஸ்லிம்களும் முஸ்லிமல்லாத ஏனைய சகோதரர்களும் அவ்வியக்கங் களிடையே போதிய சிந்தனைத் தெளிவற்ற நிலைமை நிலவுகின்றது என்று கருதும் நிலைமையை மாற்றி யமைக்க வேண்டிய பொறுப்பு இஸ்லாமிய இயக்கங் களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

  மக்கள் மயப்படுத்தாமைக்கான காரணம் எதுவாக இருப்பினும் குறைந்தபட்சம் இன்னும் மக்கள் மயப் படுத்தப்பட வில்லை என்பது உண்மை. முகப்பத்தகம் மற்றும் இதர ஊடகங்கள் மூலம் இஸ்லாமிய இயக்கங் கள் தமது கருத்துக்களை முன்வைப்பது அவர்களது கருத்துக்களையும் சிந்தனையையும் மக்கள் மயப் படுத்துவதற்கான மிக ஆரோக்கியமான வழிமுறை யாகும். இத்தகைய பங்களிப்பு மூலம் மட்டும்தான் நமது இஸ்லாமிய அமைக்கள் நம்மிடையே சிந்தனைத் தெளிவு இருக்கின்றது என்பதனனைக் 99 சதவிகிதத் திற்கும் அதிகமான இஸ்லாமிய இயக்கங்களுக்கு வெளியில் உள்ள முஸ்லிம்களுக்கு முன்வைத்தல் சாத்தியமாகும்.

  எனினும் அவர்களது செயற்திட்டங்கள் அவர்களது அங்கத்தவர்களை மாத்திரம் இலக்காக் கொண்டதாக நினைப்பார்கள் எனின் 99 சதவிகதமான முஸ்லிம்க ளிடையேயும் ஏனையவர்களிடையேயும் இஸ்லாம் முன்வைக்கும் சிந்தனைகளையும் விழுமியங்களையும் கொண்டு செல்வதற்கான ஏனைய சாதனங்கள் குறித்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
   
 • Ummu Eimaan http://www.youtube.com/watch?feature=player_embedded&v=5NmAx_SrTLg#!
  www.youtube.com
  திருமண ஒப்பந்தம் குர்ஆன் சுன்னா ஒளியில் விளக்கமளிக்கிறார் உஸ்தாத் மன்ஸூர் அவர்கள்.
   
 • Ummu Hana  நம் சமூகத்தில் நடைமுறையில் காதல் திருமணம், குடும்ப அங்கத்தவர்கள் பிரேரணையின் பேரில் அவர்களது தெரிவின் பிரகாரம் தனது வாழ்க்கைத் துணையைத் தீர்மாணித்தல் எனும் இரு வகையான திருமண ஒழுங்குகள் காணப்படுகின்றன.

  இவ்விரு ஒழுங்குகளிலும் திருமண வாழ்வை ஆரம்- பிக்க
  இருக்கும் இரு தரப்பினரும் எந்தளவுக்கு தமதும் தமது குடும்பத்தவர்களதும் விருப்பு, எதிர்காலம் பற்றிய கணவுகள், இலக்குகள், மற்றும் நம் புதுவாழ்வில் நமக்கு இருக்கும் பொறுப்புகள், போன்ற விடயங்கள் குறித்து தமக்குள் திருமணத்திற்கு முன்பே புரிந்துணர்வை ஏற் படுத்திக்கொள்கின்றனர்?

  திருமணத்தை மிக அழகான ஆரோக்கியமான ஒரு குடும்பமாக இருவர் இணைந்து வாழ்வதற்கான ஒரு ஒப்பந்தமாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. இத்தகைய ஒரு ஒப்பதந்ததை ஏற்படுத்திக் கொள்வதாற்கனா அடிப்படையாக இரு தரப்பினருக் கிடையேயும் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று பரஸ்பர புரிந் துணர்வை ஏற்படுத்திக் கொள்வது ஒரு அடிப்படை நிபந்தனையாக அமையாதா?

  இது குறித்து உங்கள் கருத்து என்ன?
   
 • Safiyya Zaid b4 da wedding, understanding etpaduthi kolvadu enbadu islathil anumadikka pattadalla thane.After da niqah only thy cn make understanding between them & wth othrs also.i thnk it is suitable 4 a muslim man & woman.1 thng Allah is da big planner. He knws evry thng than us. v cant rearrange da rules which he told 4 our personal purposes.
   
 • Abdul Samad Mohamed Akram  சகோதரி உம்மு ஹனா, இஸ்லாமிய இயக்கம் பற்றி பேசும் பொழுது தெரிந்தோ தெரியாமலோ உங்களது வார்த்தையாடல் அணுகு முறை எதிர்மறையாக அமைந்து விடுகிறது, இது ஒரு விடயம் பற்றி சப்ஜக்டிவ்வாக கலந்துரையாடுவதற்குத் தடையாக அமைகின்றது, பலரது மன உணர்வுகளை எதிராக உசுப்பி விடுகின்றன அல்லது மனதைக் காயப்படுத்துகின்றன. இந்த அணுகு முறையைத் தவிர்த்து பேசுவதானால் கருத்துப் பரிமாறுவதும் பங்களிப்புகளைப் பரிமாறுவதும் தடையாக அமைய மாட்டாது.
   
 • Ummu Hana //மக்கள் மயப்படுத்தாமைக்கான காரணம் எதுவாக இருப்பினும் குறைந்தபட்சம் இன்னும் மக்கள் மயப் படுத்தப்பட வில்லை என்பது உண்மை. முகப்பத்தகம் மற்றும் இதர ஊடகங்கள் மூலம் இஸ்லாமிய இயக்கங் கள் தமது கருத்துக்களை முன்வைப்பது அவர்களது கருத்துக்களையும் சிந்தனையையும் மக்கள் மயப் படுத்துவதற்கான மிக ஆரோக்கியமான வழிமுறை யாகும். இத்தகைய பங்களிப்பு மூலம் மட்டும்தான் நமது இஸ்லாமிய அமைக்கள் நம்மிடையே சிந்தனைத் தெளிவு இருக்கின்றது என்பதனனைக் 99 சதவிகிதத் திற்கும் அதிகமான இஸ்லாமிய இயக்கங்களுக்கு வெளியில் உள்ள முஸ்லிம்களுக்கு முன்வைத்தல் சாத்தியமாகும்.

  எனினும் அவர்களது செயற்திட்டங்கள் அவர்களது அங்கத்தவர்களை மாத்திரம் இலக்காக் கொண்டதாக நினைப்பார்கள் எனின் 99 சதவிகதமான முஸ்லிம்க ளிடையேயும் ஏனையவர்களிடையேயும் இஸ்லாம் முன்வைக்கும் சிந்தனைகளையும் விழுமியங்களையும் கொண்டு செல்வதற்கான ஏனைய சாதனங்கள் குறித்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.//
   
 • Ummu Hana  //திருமணவாழ்வு குறித்தும் தனது வாழ்க்கைத் துணைவரை அல்லது துணைவியரைத் தெரிவு செய்யும் விதம் குறித்தும் நமது நடைமுறைக்கும் இஸ்லாமிய விழுமியங் களுக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கின்றது?
  இது குறித்து உங்களது கருத்துக்களை அறிய விரும்பகின்றென். //
   
 • Ummu Hana  காதல் திருமணங்களில் அல்லது குடும்ப அங்கத்த- வர்கள் பிரேரணையின் பேரில் அவர்களது தெரிவின் பிரகாரம் தனது வாழ்க்கைத் துணையைத் தீர்மாணிக்கும் திருமணப் பேச்சுவார்தைகளில் திருமணம் முடிக்கப்போகும் ஆண் பெண் இரு தரப்பினரது விருப்பங்கள், வாழ்வு குறித்த கணவுகள், எதிர்கால இலட்சியங்கள், எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள், அவற்றை எதிரக்கொள்ளும் விதம் என்பவை குறித்தும், பொதுவாக திருமணமான பின் எதிர்கொள்ள நேரிடும் குடும்பரீதியானஈ கலாச்சார ரீதியான பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அவற்றை எதிர்கொள்ளும் விதம் என்பவை குறித்து கதைக்கப் படுகின்னவா?
   
 • Noor Mohamed Mifly  திருமணம் என்பது காதல் அல்லது பெரியோரின் பேச்சுவார்த்தை மூலமான திருமணமாக முடியலாம். இரு நிலைமைகளிலும் ஆண் /பெண் இரு சாராரினதும் சம்மதம் கட்டாயம் பெறப்பட வேண்டும் என்பதில் இரு கருத்து வேறுபாடு முஸ்லிம்கள் மத்தியில் இருக்க முடியாது. எது எப்படி இருப்பினும் தங்களது வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதை அவர்களிருவருமே பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டும்.
  தேவை ஏற்படின் பெரியவர்கள் அல்லது அவர்கள் விரும்போவோரிடன் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும். இது ஒரு சாதாரண விடயம். ஒவ்வொரு நபரும் இயல்பாக அறிந்து கொள்கின்ற விடயம். மீன் குஞ்சுக்கு நீச்சளிடிக்க பழக்க வேண்டுமா?
   
 • Mohammed Kamaruzaman · 21 mutual friends
  எதிர் பளினதவர்களின் மீள் காதல் வருவது இயல்பு. மனிதன் என்றால் அது வரத்தான் செய்யும். நபி (ஸல்) அவர்களை கதிஜா நாயகி கலியாணம் பண்ண ஆசைப்பட்டது என்ன? மனிதன் என்றால் எதிர் பாலினத்தின் மேல் இருப்பு வருவது என்பது சாதாரணமே. இதை புரிய தெரியாத பெற்றோர்கள்தான் அசாதரனமானவர்கள். சில நேரம் அவளோ அவனோ தனக்கு மிகவும் பொருத்தமானவர் என்று பலவிதமான பரீட்சைக்கு பின் உணரலாம் அல்லவே உணரலாம் அல்லவா. இதை எத்தனை பெற்றார்கள் புரிகிறார்கள்?
   
 • Mohammed Kamaruzaman · 21 mutual friends
  நான் இங்கு ஊர் சுத்தும் காதலர்களை பற்றி பேசவில்லை. தனது உணர்வுகளை உணர்த்து தந்து எதிர்காலத்தையும் உணர்த்து அதட்காகன ஒரு ஆயத்தமாக ஒரு சிலர் சிலரை மனதில் வைத்திருக்கலாம். அதை புரியாத பெற்றோர்கள் தமது அடம்பரம, சில குறுகிய சிந்தனைகள், பணம், சில தனிப்பட்ட விரோதம், குடும்பமதிப்பு போன்ற இழிவான சில விடயங்களுக்காக தமது பிள்ளைகளின் வருங்காலத்தை சிரளித்த பெற்றோர்கள் எத்தனை பேர்? இன்று என் இவ்வளவு கலியன பிரிவுகள்?
   
 • Mohammed Kamaruzaman · 21 mutual friends
  கலியாணம் பற்றிய சரியான சிந்தனை இல்லாத இந்த சமுகத்தில் இன்று எத்தனை கலியன பிரிவுகள். இன்று இது நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இன்னும் இஸ்லாத்தை பேசும் பலருமே இதில் சரியான ஒரு முடிவுக்கு வர வில்லையென நினைக்கிறன். அவர்களால் தமது பிள்ளைகள...ின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் தம்மிடம் சில சிந்தனைகளை வைதிருக்குரார்கள் அதன் படியே அடுத்தவர்களும் சிந்திக்க வேண்டும் என நினைகின்றனர். உணர்வுகளை புரியாமல் உறவுகளை அன்பினால் பிணைக்க முடியாது.
   
 • Ummu HanaNoor Mifly  //எது எப்படி இருப்பினும் தங்களது வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதை அவர்களிருவருமே பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டும்.// சகோதரரே நீங்கள் குறிப்பிடுவது உண்மையெனின் அல்குர்ஆன் திருமண ஒப்பந்தம் ஒன்றை வழியுறுத்துகின்றது. திருமண ஒப்பந்தமொன்றில் அடங்கவேண்டிய விடயங்கள் எவை என நீங்கள் கருதுகின்றீர்கள்?
   
 • Noor Mohamed Mifly  ஈஜாப், கபூல், சாட்சி இவைகள் ஒரு திருமண ஒப்பந்தத்தில் அமையா வேண்டுமென்பது மிக அடிப்படையான விடயங்களே.
   
 • Mohammed Kamaruzaman · 21 mutual friends
  கலியாணம் ஏன் நடைபெறுகிறது என்பது குட புரியாத பல பெற்றோர்களும் பிள்ளைகளும் இருக்கின்றனர்? கலியாணத்தின் பெறுமதியை விளங்காத பெற்றோகளால் எப்படி பிள்ளைகளுக்கு கலியாணம் நடத்த முடியும்?
   
 • Al Akhawaathul Muslimaath  //தனிப்பட்ட முயற்சிகளால் நிச்சயமாக வெற்றி கொள்ள முடியாது, கூட்டான முயற்சிகளே இலக்கை நோக்கி பயனிக்க வல்லன// உங்களது கருத்துக்களை தொடர்ந்து பார்த்து வந்தேன், எனினும் இவை சமூகத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் அப்போதுதான் இதனை நடைமுறையில் காணலாம் அதுவரையில் ஏட்டிச் சுரைக்காயாகவே இருக்கும். இந்த புரிதல், தெளிவு இல்லாததனால் இன்று இலங்கை முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்துக்கள் வருடாந்தம் கூடிக்கொண்டே வருவதனை புள்ளிவிபரங்கள் காட்டி நிற்கின்றன.
   
 • Al Akhawaathul Muslimaath  நாம் பொருளரியாது சொல்லும் ஈஜாப், கபூல், சாட்சி, வலி இவை அனைத்தையும் விடவும் இன்று ஒரு திருமனத்துக்கு புரிதலும், பொருத்தமுமே மிக அவசியப்படுகின்றது. இந்த வகையிலே ஈஜாப் கபூல் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அது ஏட்டில் மாத்திரமே கபூல் ஆகும்.
   
Read 49318 times Last modified on Thursday, 17 October 2013 18:55
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization